புத்தனாம்பட்டி, நேரு நினைவுக்கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

0
1

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக்கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக்கல்லூரியில் (22-09-2021) இன்று கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் சென்னை Harris & Menuk நிறுவனத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன், செயலர். பொன். இரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 95 மாணவர்களுக்கு ரூ.4,75,000/- கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

2

கல்லூரி தலைவர் பேசும்போது Harris & Menuk நிறுவனத்தினர் அரியரத்தினம் ஐயாவின் ஈகைக் குணத்தை எடுத்துரைத்து கடந்த 14 வருடங்களாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதை பாராட்டினார்.

கல்லூரி செயலர் பேசும்போது மாணவர்கள் கல்வி உதவித் தொகையைப் பயன்படுத்திக் கொண்டு நன்கு படிக்கும்படி ஊக்குவித்தார். இந்த Covid -19 இடர்பாட்டிலும் தடைஇல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்கியமைக்கு நன்றி கூறினார்.

மேலும் விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். A.R. பொன்பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார். கணிப்பொறி அறிவியல்துறைத் தலைவர் முனைவர் மு. முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். ஆங்கில புலத் தலைவர் முனைவர் K.T. தமிழ்மணி, வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணினி அறிவியல்துறைத் தலைவர் K.பொன்வேல் அழகுலெட்சுமி, பேராசிரியர் P. இஸபெல்லா ஆகியோர் செய்தார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.