திருச்சியில் கள்ளச் சந்தையில் விற்க முயன்ற ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்: 

0
1

திருச்சியில் கள்ளச் சந்தையில் விற்க முயன்ற ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்: 

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் துணை சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று (22/09/2021) அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

2

இந்நிலையில் நேரு தெருவில் அலிபாய் என்பவர் கடைக்கு முன்பு சந்தேகப்படும் படியாக டேங்கர் லாரியும் ஒரு சரக்கு வேனும் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சோதனை மேற்கொண்டபோது ரேஷன் மண்ணெண்ணெய் குறைந்த விலைக்கு வாங்கி வந்து கள்ள சந்தையில் விற்பதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

4

இதனையடுத்து, செல்வராஜ் (41), மணிகண்டன்(39) ஆகிய 2 பேர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பதுக்கி வைத்து இருந்த 3600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயையும் மற்றும் டேங்கர் லாரி சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.