திருச்சி-திண்டுக்கல் சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை:

0
1

திருச்சி-திண்டுக்கல் சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை:

திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன்நகர் பகுதியில் அருகே உள்ள தனியார் பள்ளியின் எதிரே முட்புதரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

2

தகவலின் பேரில் போலீசார்  அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

4

இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண் இறந்து கிடந்த பகுதியில் கிடைத்த பையில் 2 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடைத்தது.

இதனையடுத்து அப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.