திருச்சி அருகே டூவீலர் திருடனை விரட்டி பிடித்த போலீஸ்:
திருச்சி அருகே டூவீலர் திருடனை விரட்டி பிடித்த போலீஸ்:
முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் நேற்று (21/09/2021) வேலை முடிந்து சொந்த ஊரான தொட்டியத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக ஒரு நபர் டூவீலரில் அதிவேகமாக சென்றுள்ளதை கண்ட சுரேஷ் அவர் மீது சந்தேகம் அடைந்து அவரை பிடிக்க முயன்றார்.
போலீஸ் துரத்துவதை அறிந்த அந்த வாலிபர் மேலும் வேகமாக சென்றார். விடாமல் துரத்திச் சென்ற காவலர் சுரேஷ் காட்டுப்புதூர் பிரிவு ரோடு அருகே அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து சக காவலர்கள் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த நவீன்குமார் என்பதும், முசிறி பார்வதிபுரம் பகுதியில் ஏசி ரிப்பேர் செய்ய வந்த மெக்கானிக் ஸ்கூட்டரை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதுரியமாக செயல் பட்டு திருடனை விரட்டி பிடித்த காவலர் சுரேஷை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.