விடிந்தால் அப்பாவின் நினைவு நாள்…(வெங்கிடாசலம்)

0
1
Jeeva Kumar is with Ramamoorthy Kannan.

விடிந்தால் அப்பாவின் நினைவு நாள்…

அப்பாவோடு ஓட்டலுக்கு போனதாய் நினைவு இல்லை.
அப்பாவோடு துணிக்கடைக்கோ சினிமாவிற்கோ போனதாய் நினைவு இல்லை.நான் பிறக்கும்போது அரசியல் கைதியாக அவர் கடலூர் சிறையில் இருந்தார்.மரணத்திற்கு சில மாதம் முன்பு மிசா கைதியாக திருச்சியில் இருந்தார்.அவர் வாழ்வு
2

.தீண்டாமைக்கு எதிரான கிளர்ச்சி,

1.தீண்டாமைக்கு எதிரான கிளர்ச்சி,
சொந்த ஊரில் சொந்தக்காரர்களை
எதிர்த்தே அவர் துவங்கினார்.2.நிலமற்றோருக்கு நிலத்துக்கான
போராட்டம் உதாரணம் உரத்தூர் 3.காவல்
துறையை அதிகார வர்க்கத்தை எதிர்த்த
கிளர்ச்சி 4.மக்களின் அடிப்படை வசதி
களுக்கான கிளர்ச்சி ..இதுதான் அவர் வாழ்க்கை ஓடியவிதம்

சதிகாரர்களால் அவர் கொல்லப்பட்டார்

எங்களின் வருத்தம் அவர் சாகும்போது
நாங்கள் யாரும் அருகே இல்லை..சோள
கம்பட்டி ரயில் நிலையத்தில் ஓர் காரிருளில் சதிகாரர்களால் அவர் கொல்லப்பட்டார்.அதே ரயில் நிலையத்தில் அன்று இரவும் அடுத்த
நாள் காலையும் ரயில் ஏறி பள்ளிக்கு திருவெறும்பூர் போய்கொண்டிருந்தேன்.
அவரை தலைவராக கொண்டாடிய பலரும் அங்குஅவர் கொல்லப்பட்டது
தெரியாமலே அவர் சிந்திய குருதியை
மிதித்தே பயணித்து கொண்டிருந்தோம்..
சோவென்று கொட்டிய அடைமழை அவர்
குரலையும் மறைக்கப்பட்ட அவர் உடலை
யும் அடையாளம் காட்டவில்லை.4 நாள்
கழித்துதான் காணோமே என தேட
துவங்கினோம்…

விடிந்தால் அப்பாவின் நினைவு நாள்…
அவர் சாகும்போது நாங்கள் யாரும் அருகே இல்லை.அவர்
உடலையும் நாங்கள் பார்க்கவே இல்லை..
விடிந்தால் அப்பாவின் நினைவு நாள்…

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

3

Leave A Reply

Your email address will not be published.