திருச்சி எல்ஐசி முகவர் யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

0
1

அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம் திருச்சி யூனிட் 1 கிளை 2வது மாநாட்டு செப்டம்பர் 18 சனிக் கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர், இவ்வாறு ஆலோசகராக தோமையார், கெளரவத் தலைவராக பூமிநாதன், தலைவராக ராஜசேகர். துணைத் தலைவராக இந்திராணி, அப்துல் நிஸாருதீன் , ராஜராஜேஸ்வரி, செயலாளராக கருத்திருமன், துணைச் செயலாளராக இருதய மேரி, சத்யா, மோகனசுப்பிரமணி பொருளாளராக நாகராஜன், நிதி செயலாளராக பழனி.பி ரேட் குமார் ஆகிய முகவர்களும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யபட்டு உள்ளனர்.
மேலும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அவை பின்வருமாறு

1), வற்றாத ஜீவநதி மக்கள் நலத்திட்டங்களான ரயில்வே பாதுகாப்புத்துறை சாலை மேம்பாடு அணைக்கட்டு நகர்புற மேம்பாடு நாட்டின் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் இயட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளி அள்ளி தரும் அட்சய பாத்திரம் ,

2

உலகின் மூலை முடுக்கெல்லாம் வணிகத்தை மேற்கொண்டு லாபகரமாக இயங்கி வருவதும்,,

உலகின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமான டாப் 3 என பெயரெடுத்தும் தொடர் சாதனையை செய்து வருகின்ற அதிசய நிறுவனம்,,,

அரசிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் அளவிலா நிதியை அள்ளி தரும் அள்ள அள்ள குறையாத அழுதசுரபியை ,, பொன் முட்டை யிடும் வாத்தான மக்களின் .66 ஆண்டுகள் நன்மதிப்பை பெற்ற நம்நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியல் விடுவதை இம்மாநாடு திரும்ப பெற கோருகிறது,,, மேலும் அன்னிய கம்பெனிகளுக்கு பங்கு விற்பனையை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.,,,,

2) அரசின் இத்தகைய பொதுத் துறை விரோத காப்பீட்டு துறை விரோத தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராகவும் எல் ,ஐ.சியை காக்கும் போரில் முதல் நிலை அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள் ஊழியர்கள் முகவர்கள் ( LICAOI & ஜெயின் LIAFI
சுக்லா LIAFI
கஜபதி ராவ் LIAFI ஃ ஸாரி டIAFI அலியாபி உள்ளிட்ட அனைவரையும் ) மற்றும் பாலிசிதாரர்கள் உள்ளிட்ட நிறுவனம் காக்கும் கூட்டுக் குழுவை அமைத்திட அனைவரும் முன்வருமாறு இம்மாநாடு பணிவன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கிறது.,,,

3 )அனைத்து முகவர்களுக்கும் குமுக்காப்பீட்டை 25 லட்சமாக உயர்த்துமாறும் , அதற்கான வயது 69 என இருப்பதை முற்றிலுமாக நீக்க வேண்டுமெனவும் இம் மாநாடு கோருகிறது.,,,

4) மன்ற முகவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டின் குளறுபடிகளை நீக்கிடவும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கிட வேண்டுமென யூனிட் 1 கிளையின் 2 வது மாநாடு வற்புறுத்துகிறது,,,

5) அனைத்து முகவர்களுக்கும் அடையாள அட்டை விரைந்து வழங்கிட இம் மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

6) யூனிட் 1 கிளையின் அனைத்து முகவர்களுக்கும் வாகனம் நிறுத்த வாகன நிறுத்தம் உடனடியாக செய்து தர இம்மாநாடு கோருகிறது.,,,

7) எல்.ஐ.சியின் திருச்சி CA கிளை அலுவலகம் நமது கிளையின் தரைத்தளத்திற்கு வர இருப்பதாகவும், அதற்கான அடிப்படை வேலைகளை கோட்ட வணிக மேலாளர் தலைமையில் மேற்கொண்டு வருவதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.,,, வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் CA கிளையான சொந்தக் கட்டிடத்தில் செயல்பட முயற்சி எடுப்பது நிர்வாக ரீதியாக நல்ல முடிவாக இருப்பதால் இம்மாநாடு முழுமனதோடு வரவேற்கிறது.,, ஆனால் அத்தகைய முடிவானது யூனிட் 1 முகவர்களுக்கும் ஏனைய வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வணிகத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்,, அதே போல யூனிட் 1 கிளையின் பாரம்பரியம் கேள்விக்குள்ளாகும், எனவே தேவையற்ற பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு யூனிட் 1 கிளையின் 2 வது தளத்தில் இயங்கும் அத்தனை துறைகளையும் அப்படியே தரைத்தளத்திற்கும் ஒரு வேளை CA கிளை வரும் பட்சத்தில் 2வது தளத்திற்கு கொண்டு செல்லவும் ஏற்கனவே நமது கிளையின் முதன்மை மேலாளரிடம் நமது லிகாய் சங்கம் மட்டுமே நேரில் வலியுறுத்தியது,,, மேலும் இக்கோரிக்கை குறித்து இம் மாநாடு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது., .,,

8 ) சமீபத்தில் ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரிதிரு Aஆண்டோ அவர்களுக்கு பிறகு அவர்களது அணி முகவர்கள் தற்சமயம் அவரது ஓய்வையொட்டி முகவர்கள் பல சேவைகளுக்காக யாரேனும் ஒரு வளர்ச்சி அதிகாரியையோ அல்லது கிளை துணை மேலாளர் (வணிகம்) அவரையோ அணுக வேண்டியுள்ளது.,, இத்தகைய போக்கு பல்வேறு சங்கடங்களையும் வணிகத்தின் தேக்க நிலையையும் ஏற்படுத்தி உள்ளது,,, இதனால் சில முகவர்கள் முகவாண்மையையேவிட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு உள்ளது,,, எனவே இம் மாநாடு அத்தகைய முகவர்களுக்கு வளர்ச்சி அதிகாரிகளை ஒதுக்கீடு செய்து தொடர்ந்து வணிகத்தில் உயர ஆவண செய்திட கிளை, கோட்ட மேலாளர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது,,,

 

9) முகவர்களுக்கான பணிக்கொடை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்குவதோடு 15 வருடம் முகவாண்மை முடித்திருந்தாலே தர வேண்டும் என பணிக்கொடை சட்டத்தில் திருத்தம் மேற் கொள்ள வேண்டுமென திருச்சி யூனிட் 1 கிளையின் 2 வது மாநாடு கோருகிறது ,,,

10) இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில் LIC முகவர்களுக்கு நலவாரியம் அமைத்து
i) கல்வி உதவி தொகை
ii) திருமண உதவி தொகை
iii) பேறுகால உதவி தொகை
iv) இயற்கை மரண உதவி தொகை

v) விபத்து மரண உதவி தொகை

vi) விபத்தில் ஏற்படும் ஊனத்திற்கான உதவி தொகை

Vii) ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை முகவர்களுக்கு அள்ளி அள்ளி தரும் கேரள அரசை போல தமிழகத்திலும் அனைத்து முகவர்களுக்கும் பெற நலவாரியம் அமைக்க தமிழக அரசை திருச்சி யூனிட் 1 கிளை மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.,,, உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.,,,,

3

Leave A Reply

Your email address will not be published.