திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள தயார் நிலை: டீன் வனிதா:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள தயார் நிலை: டீன் வனிதா:

தமிழகத்தில் கொரோனாவின் பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலைவலி, உடல்வலி, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் தேவைக்கேற்ப தனி வார்டுகள் அமைக்கப்படும் என திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.