ஒன்றிய அரசை கண்டித்து, திருச்சி மாநகர் 55வது வார்டு திமுகவினர் கண்டன ஆர்பாட்டம் !
திருச்சி மத்திய மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 3 வேளாண் சட்டங்களை திருப்பி பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும்,
மேலும் அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை உயர்வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று (20/09/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் குறத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 55 வது வட்ட கழக செயலாளர் ஆர். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார், வட்ட பிரதிநிதி ஆகாஷ், இளைஞரணி அமைப்பாளர் தி.கே கஸ்தூரி ஜானகிராமன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேதாச்சலம், தில்லை நகர் பகுதி மாணவரணி அமைப்பாளர் ஆர். நாராயணசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.