திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், திருச்சி குண்டூரில் கருப்புக்கொடி போராட்டம்!

0
1

பா.ஜ.க. அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டனப் போராட்டம் இன்று (20.09.2021) திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் குண்டூரில் உள்ள திருவெறும்பூர் தெற்கு ஒன்றியக் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு, மோடி அரசின் ஜனநாயக விரோத போக்குகளையும், மக்கள் விரோதக் கொள்கைகளையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

2

இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட இயக்க எழுத்தாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், குண்டூர் ஊராட்சியின் திமுகவின் 3ஆவது வார்டு செயலாளர் பொறியாளர் குமார், 4ஆவது வார்டு செயலாளர் குமாரசாமி, 5ஆவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் MIET குமார், 5ஆவது வார்டு செயலாளர் செல்லமுத்து, 6ஆவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்லதுரை, 7ஆவது வார்டு செயலாளர் இராமஜெயம், திருவெறும்பூர் ஒன்றிய கழகப் பிரதிநிதி பர்மாகாலனி வேலு, 4ஆவது வார்டு குமார், கோவிந்தன், 8ஆவது வார்டு உ.பாலு, பிரகாஷ், சத்தியமூர்த்தி, இருதயராஜ், கோபி மற்றும் திருவளர்ச்சிப்பட்டி, அய்யம்பட்டி, பர்மாகாலனி, அயன்புத்தூர் சார்ந்த திமுக கூட்டணிக் கட்சியைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.