திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியின் பெயர் மாற்ற முன்னாள் மாணவர்கள் கோரிக்கை:

0
1

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியின் பெயர் மாற்ற முன்னாள் மாணவர்கள் கோரிக்கை:

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று (19/09/2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியர் செல்லப்பா தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் செந்தில் ராஜன் வரவேற்புரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர் சுகந்தி, முஸ்தபா கமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறியதாவது:

2

திருச்சி ஈவேரா கல்லூரி தொடங்கி 57 ஆண்டுகள் ஆகின்றது. மேலும் இங்கு படித்தவர்கள் அரசு அதிகாரிகளாலும், அரசியல் சிறந்தவர்களாகவும் விளங்கி வருகின்றனர். தமிழகத்தில் 2வது பெரிய அரசு கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் பெயரை தந்தை பெரியார் கல்லூரி என மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கூறினர்.

இந்நிகழ்வில், கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.