திருச்சி திருவெறும்பூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்ற 3 பேர் கைது:

0

திருச்சி திருவெறும்பூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்ற 3 பேர் கைது:

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (61). இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார்.

வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று (19/09/2021) காலை மீண்டும் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டு போது 3 வாலிபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயன்று உள்ளது தெரிய வந்தது. மேலும் கடையில் பணமில்லாத காரணத்தினால் அங்குள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சௌந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் காட்சிகளின் மூலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பூலாங்குடி காலனியைச் சேர்ந்த சச்சின் (20), நவல்பட்டு பரமக்குடியை சேர்ந்த வின்சென்ட் (19), மற்றும் திருவரம்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.