துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

0
1

துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா இன்று (19/09/2021) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்டல செயலாளர் மணிகண்டன் வரவேற்பு வழங்கினார். மண்டல தலைவர் கர்ணன் முன்னிலை வகித்தார். முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது பின்பு இறந்த சங்க நிர்வாகி உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2

அதனை தொடர்ந்து 2021-2023 ஆண்டின் துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவராக ஆர்.கிருபானந்தம் கெளரவ தலைவராக ரா. கார்த்திகேயன் செயலாளராக சி.இளையராஜா பொருளாளராக வி. பெரியண்ணன் துணைத் தலைவராக ஜி.மனோகரன் எஸ். லோகநாதன் இணைச்செயலாளராக சி.சேதுமாணிக்கம் செயற்குழு உறுப்பினர்களராக பி.பிரீத்வி எம்.எஸ். பிரபு கே.கார்த்திக் ஜெ.திலீப் எஸ். விக்னேஷ் ஆகியோருக்கு உறுதிமொழி எடுத்து பணியேற்பு செய்து வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பொறியாளர் சரவணன் நிகழ்ச்சியில் சிறப்பு கெளரவ விருந்தினராக மாநில நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற எம்.இராமநாதன் மற்றும் மாநில செயலாளர் கே.காந்தி மாநில பொருளாளர் பி.மணிமாறன் மாநில துணைத்தலைவர் எம்.ரவி மாநில உதவி தலைவர் ஆர்.விஜயபானு மாநில இணைச்செயாலாளர் கே.சுகுமார் மற்றும் திருச்சி முசிறி குளித்தலை மணப்பாறை பெரம்பலூர் புதுக்கோட்டை அறந்தாங்கி போன்ற கட்டிட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆர்.பாரி ஜி.அன்பு ஜெ.பிரதீப் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிறைவில் துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் இளையராஜா நன்றியுரை வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.