முதுதமிழ் எழிலரசி கேத்தரீன் ஆரோக்கியசாமி அவர்களின் நூல்கள் வெளியீட்டுவிழா

0
1

முதுதமிழ் எழிலரசி கேத்தரீன் ஆரோக்கியசாமி அவர்களின் நூல்கள் வெளியீட்டுவிழா

முதுதமிழ் எழிலரசிகேத்தரீன் ஆரோக்கியசாமி எழுதியுள்ள அருக்காணி என்னும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் வாழும் தெய்வங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

2

கிராப்பட்டி புனித தெரசாள் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருள்தந்தை எல்.அந்துவான் தலைமையேற்றார். தமிழ்மாமணி முனைவர் சு. செயலாபதி  முன்னிலை வகித்துள்ள இவ்விழாவிற்கு திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு பொறுப்பாளர்  இராச.இளங்கோவன்  வரவேற்புரையாற்றினார்.

அருக்காணி என்னும் சிறுகதைத் தொகுப்பை திருவரங்கம் அமல ஆசிரமம் அருள்தந்தை ஆ.ஜேசுதாஸ் வெளியிட ஓய்வு டவுன் பிளானிங் சூப்பர்வைசர் கே.லாசர் பெற்றுக்கொள்ள தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இ.சூசை நூல் அறிமுகவுரை வழங்கினார்.வாழும் தெய்வங்கள் என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை கிராப்பட்டி பங்குத்தந்தை அருள்தந்தை ஜோ.ஜோ லாரன்ஸ் வெளியிட கீதாநகர் கிங்ஸ்லி பதின்மப் பள்ளி முதல்வர் தே.தேவராஜ் பெற்றுக்கொள்ள பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் தமிழ்மாமணி முனைவர் ப. சுப்பிரமணியன் அறிமுகவுரை வழங்கினார்.

திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு சார்பாக திருமதி கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களுக்கு எனும் இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டது. அருள்தந்தை சின்னப்பன் அவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து திருச்சி உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கத் தலைவர் அப்துல் சலாம், தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களின் படைப்புகளை முனைவர் பட்ட ஆய்வுப் பொருண்மையாகக் கொண்டு, தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் கி.ஆல்வின் ஜோஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.விழாவில் எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி தம் ஏற்புரையை நன்றியுரையாகப் பதிவு செய்தார்.

விழாவில் பொறியாளர் கிட்ஸ் ராஜா, முனைவர் ஜெனட் ராஜேஸ்வரி அருள்சகோதரி மிக்கேலம்மாள், முனைவர் இராஜாத்தி, வழக்கறிஞர் மார்டின்,  பேரா.ஜான் கென்னடி உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.முனைவர் அ‌.கோபிநாத் மற்றும் திரு பிரபு ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

3

Leave A Reply

Your email address will not be published.