திருச்சியில் உள்ள வ.வே.சு ஐயர் இல்லத்தில் இனிகோ இருதயராஜ் !

1
1

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் செப்டம்பர் 19 இன்று கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தார். மேலும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார், அப்போது வ. வே சுப்பிரமணிய ஐயர் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்,

வ.வே சுப்பிரமணிய ஐயர் இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டது குறித்த இனிகோ இருதயராஜ் குறிப்பிட்டு இருப்பது, நான் பிறந்து வளர்ந்த இந்த திருச்சி மண்ணிற்கு எவ்வளவோ சிறப்புகள், எண்ணிலடங்கா சரித்திரங்கள் மாமன்னர்கள் குறுநில மன்னர்கள் வாழ்ந்த பாதச் சுவடுகள் பதிந்த நினைவுச் சின்னங்கள், அறிவொளியை புகட்டிய தமிழ் வளர்த்த சான்றோர் திராவிட இயக்கம் கண்ட தியாக திருவாளர்கள் என எத்தனை எத்தனை சிறப்புகள், அந்தவகையில் வ.வே.சுப்ரமணிய ஐயர் அவர்களின் இல்லம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட வரகனேரி பகுதியில் உள்ளது.

2

அவர் வாழ்ந்த வீட்டை பழமை குறையாமல் குளுகுளு தன்மையுடன் அவரின் நினைவு இல்லமாகவும் அரசு கிளை நூலகமாகவும், தமிழ் மொழிக்கான ஆவண காப்பகமாகவும் இயங்கி கொண்டிருப்பதை ஏற்கனவே நான் அறிந்திருந்தாலும் அப்பகுதியின் கள ஆய்வின் போது நேரடியாக சென்று அவர்கள் இல்லத்தை பார்வையிட்டேன்.

எதிரிகளை எதிர்க்கத் துணிந்து அவர் பயன்படுத்திய ஆயுதங்களை பார்த்து பிரமித்தேன், 1920 ல் தேசபக்தன் பத்திரிகையில் பணிபுரிந்து அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதியதின் பயனாக சென்னையிலும் பின்னர் பெல்லாரியிலும் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்ததும், தமிழின் வளர்ச்சிக்காக இலக்கியத்தரம் வாய்ந்த பல நூல்களை எழுதியும் சிறுகதைகள் புனைந்தும் ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், பிரஞ்சு மற்றும் வட மொழிகளிலும் மொழிபெயர்த்த மாபெரும் வித்தக அறிஞராக திகழ்ந்ததும்,
தமிழ் கூறும் நல்லுலகு என்றென்றும் மறக்கமுடியாத வரலாற்றுச் சுவடுகளாகும், இப்படி வானளாவிய புகழ் கொண்ட வ.வே.சு அவர்கள் பாபநாசம் அருகேயுள்ள பாணதீர்த்த அருவியில் தவறி விழுந்த தன் மகள் சுபத்ராவை காப்பாற்ற முயன்று சுழலில் சிக்கி தன்னுயிர் நீர்த்தார் என்பது ஞாபகம் வந்ததும் கலங்கிய கண்களுடன் கனத்த இதயத்துடன் அவ்வில்லத்திலிருந்து வெளிக் கிளம்பினேன்.

ஆயினும் அவர் வளர்த்த தமிழ், காலச்சூழலில் சிக்காமல் இன்றும் துடிப்புடன், என்றென்றும் உயிர்ப்புடன் இன்று குறிப்பிட்டுள்ளார்.

3
1 Comment
  1. Harigopal says

    I’m Harigopal Ex Army from Vellore my whatsapp no 7598819262

Leave A Reply

Your email address will not be published.