திருச்சியில் குழந்தைகளுடன் மாயமான தந்தை:

திருச்சியில் குழந்தைகளுடன் மாயமான தந்தை:
திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (46). இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன விரக்தியில் இருந்த வைத்தியநாதனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வைத்தியநாதன் நேற்று முன்தினம் மகன் தாயுமான சர்மா (20), மகள் துடித்த 17 ஆகியோருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து வைத்தியநாதனின் தம்பி முரளி கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரை தேடி வருகின்றனர்.
