திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தற்கொலை:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தற்கொலை:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (24). முதுநிலை மருத்துவ மாணவரான இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

2

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் (16/09/2021) விடுதி அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்து சகமாணவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலின்பேரில் போலீசார் ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில், ரஞ்சித் குமாருக்கு தேர்வில் அரியர் இருந்ததாகவும் அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.