குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு:

குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு:
திருச்சி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள பிடியானைகள் சம்பந்தமான குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த வேம்பு என்பவரின் செல்போனை வடமாநில இளைஞர்கள் பறித்து சென்றனர். இது குறித்த வழக்கு பதிவு தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான காவலர்கள் துரிதமாக செயல்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை கைது செய்தனர்.
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசாருக்கும், வடமாநில திருடர்களை பிடித்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
