திருச்சி திருவெறும்பூர் அருகே துணிக்கடையில் மர்ம நபர்கள் கைவரிசை:

0
1

திருச்சி திருவெறும்பூர் அருகே துணிக்கடையில் மர்ம நபர்கள் கைவரிசை:

திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் மேகலா (45). இவர் அதே பகுதியில் துணிக்கடை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

2

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மாலை கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு, மற்றும் கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உடைக்க கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

4

உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த 33 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கிராம் தோடு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து மேகலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.