திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் !

0
1

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 வட்டாட்சியர்கள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு இரட்டை வழி அகல ரயில்பாதை பிரிவின் தனிவட்டாட்சியர் இருந்த சண்முகப்பிரியா, முசிறி வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

துறையூர் தனி வட்டாட்சியர் இருந்த சேக்கிழார், மணப்பாறை வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

2

தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராக இருந்த கீதாராணி, மருங்காபுரி வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

முசிறி வருவாய் வட்டாட்சியராக இருந்த சத்தியநாதன், (முசிறி) உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

(முசிறி) உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த சந்திரக் குமார், துறையூர் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

மணப்பாறை வருவாய் வட்டாட்சியராக இருந்த லஜபதிராஜ், திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

மருங்காபுரி வருவாய் வட்டாட்சியராக இருந்த ஜெயபிரகாசம் இரட்டை வழி தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

விடுப்பில் இருந்த வட்டாட்சியர் மகாலெட்சுமி, தமிழ்நாட்டு சாலை மேம்பாட்டுத் திட்ட தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் தனி வட்டாட்சியராக இருந்த பன்னீர்செல்வம் இலால்குடி வட்டாட்சிராக மாற்றப்பட்டுள்ளார்.
இப்படி 9 வட்டாட்சியர் களை மாற்றம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.