திருச்சியில் உணவு பொருள் சார்ந்த கடைகள், கோவில்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

0
1

நேற்று 17.09.2021 வெள்ளிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை சார்பாக நான்கு கோவில்களுக்கு , அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோவில் ஸ்ரீரங்கம் , ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கோவில் , தாயுமானவர் கோயில் மலைக்கோட்டை மற்றும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிகளுக்கான BHOG ( Blissful Hygienic Offering to God ) நான்கு சான்றிதழ்களும் , மேலும் , சாலையோர உணவு வணிகர்களுக்கு 07.08.2021 அன்று நடைபெற்ற FOSTAC ( Food Safety Training and Certification ) பயிற்சியின் சான்றிதழ் 193 நபர்களுக்கு மற்றும் அன்று நடைபெற்ற சிறப்பு பதிவு / உரிமம் முகாமில் பதியப்பட்ட பதிவு சான்றிதழ்கள் 79 நபர்களுக்கும் , நான்கு அங்கன்வாடி மையங்களுக்கு EAT RIGHT CAMPUS ( சரியான உணவு உண்ணும் வளாகம் ) சான்றிதழ்களும் , அங்கன்வாடி மைய 206 பணியாளர்களுக்கு FOSTAC ( Food Safety Training and Certification ) பயிற்சி சான்றிதழ்களும் , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு 03.08.2021 அன்று நடைபெற்ற சுட்டத்திலிருந்து 26 நிறுவனத்தை சார்ந்த நபர்களுக்கு FOSTAC பயிற்சி சான்றிதழ்களும் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள சுமார் 11 உணவகங்களுக்கு HYGIENE RATING ( சுகாதார மதிப்பீடு ) சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியினை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில் , நான்கு கோயில்களின் உதவி ஆணையர்கள் சார்ந்த கந்தசாமி , மாரியப்பன் , விஜயராணி , ஞானசேகரன் ஆகியோரும் , குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி , உணவகம் சார்பாக திரு.சுந்தரேசன் மற்றும் குடிநீர் சங்கம் சார்பாக மகேந்திரன் மற்றும் சாலையோர உணவகம் சார்பாக கணேசன் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் , பாண்டி , பொன்ராஜ் மற்றும் வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் , உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95 மாநில புகார் எண் : 9444042322

 

3

Leave A Reply

Your email address will not be published.