திருச்சி விமான நிலையத்தில் தொடரும் தங்க கடத்தல்:

0
1

திருச்சி விமான நிலையத்தில் தொடரும் தங்க கடத்தல்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் (15/09/2021) இரவு துபாயில் இருந்து விமானம் வந்தது .

2

விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டையைச்  சேர்ந்த சரவணன் (வயது 23) என்பவர் தனது உடலில் மறைத்து 840 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

4

ரூ.40 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, மேலும் அவரை கைது செய்த அதிகாரிகள்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி விமான நிலையத்தில் தொடர் தங்க கடத்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு உடந்தையாக சில சுங்கத் துறை அதிகாரிகளும் இருந்ததாக கூறி தொடர்ச்சியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பணி மாற்றத்திற்குப் பிறகும் தொடர் தங்க கடத்தல் நடைபெறுவது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.