திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு முதல்வர் விருது:

0
1

திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு முதல்வர் விருது:

தமிழக காவல்துறையில் காவல்நிலையத்தில் முறையாக வழக்குகளை பதிவு செய்து, சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றி செயல்புரியும் காவல் நிலையங்களுக்கு மதிப்பெண் முறையில் ஆண்டுதோறும் முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2

அந்த வகையில் 2019 – ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களில் மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 16- வது இடத்தை பெற்றுள்ளது.  தமிழக முதல்வர் விருதுக்கான சுழற் கோப்பையை திருச்சி மாநகர காவல் ஆணையர் , காவல் ஆய்வாளர் சண்முகவேலுவிடம் நேற்று (16/09/2021) வழங்கி பாராட்டினார் .

4

இந்நிகழ்வில், திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சக்திவேல் , கோட்டை உதவி ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர் .

3

Leave A Reply

Your email address will not be published.