திருச்சியில் 2 பள்ளி மாணவிகள் தீடீர் மாயம்:

திருச்சியில் 2 பள்ளி மாணவிகள் தீடீர் மாயம்:
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகள் திரிஷா (18). திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதே பள்ளியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசிகா (17) என்பவரும் திருச்சியில் உள்ள தன் சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளி சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான 2 சிறுமிகளையும் தேடி வருகின்றனர்.
