திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆய்வு- புகையிலை பொருட்கள் பறிமுதல்!

0
1

நேற்று 15.09.2021 புதன்கிழமை துறையூரில் இருந்து வந்த இரகசிய தகவலை அடுத்து திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் ரெங்கநாதன் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவால் திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளர் கடையும், நொச்சியம் பகுதியில் உள்ள இரண்டு கடைகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் 5 கிலோ துறையூர் மொத்த விற்பனையாளர் கடையின் கழிவறையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்காக மூன்று உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும், நொச்சியம் பகுதியில் இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1 கிலோ 200 கிராம் கண்டறியப்பட்டு இரண்டு கடைக்கும் தலா ரூபாய் 5000- அபராத தொகை விதிக்கப்பட்டது.

2

மேலும் மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 -இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்மந்தப்பட்ட கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியபட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22

3

Leave A Reply

Your email address will not be published.