திருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்!

0
1

மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 06.10.2021 அன்று முதல் 30.09.2021 வரை நடைபெற உள்ளது என்று மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு திருச்சிராப்பள்ளி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

இந்த முகாமில் புகார் தெரிவிக்க வருபவர்கள் தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4
2

குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி, அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்.

நா. ராஜகோபாலன்,
உதவி இயக்குநர் (காப்பீடு மற்றும் புகார்),
அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம்,
மத்திய மண்டலம் ( தமிழ்நாடு), திருச்சிராப்பள்ளி 620001.
அலைபேசி எண்: 9443979004

மேலும் தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் – செப்டம்பர் 2021” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அதோடு கரோனா பரவாமல் தடுக்க, அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாமை Google meet அழைப்பு மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புகார் அனுப்புவோர் தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூரிய முகவரிக்கு அனுப்பவும்.

3

Leave A Reply

Your email address will not be published.