திருச்சியில் வறுமை காரணமாக தீக்குளித்த தம்பதியினர்:

0
1

திருச்சியில் வறுமை காரணமாக தீக்குளித்த தம்பதியினர்:

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(51). இவரது மனைவி மகாலட்சுமி (49). இருவருக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. நடராஜன் கோர்ட்டு எதிரே உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்து வருமானத்திற்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இதனால் கணவன் மனைவி இருவரும் இணைந்து உழவர் சந்தை பகுதியில் பிஸ்கட் வியாபாரம் செய்து வந்தனர்.

2

இதிலும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், மிகவும் மன உளைச்சலில் இருந்த இருவரும் நேற்று (15/09/2021) உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வறுமையின் காரணமாக தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.