திருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருது!

0
1

தமிழ்நாடு காவல்துறையில் மாநகர மற்றும் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் அந்த காவல் நிலையங்களில் பதிவான வழக்குளின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக முதலமைச்சர் கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2019 – ஆம் ஆண்டில் சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழக முதலமைச்சர் கோப்பை காவல் நிலையங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

2

அதில் திருச்சி மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 16 – வது இடத்தை பெற்றுள்ளது. இப்படி கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் கோப்பையை திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் இன்று ( ( 16.09.2021 ) காவல் ஆய்வாளர் சண்முகவேலிடம் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சக்திவேல், கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையர் சுப்பிரமணியன் , கோட்டை காவல் நிலையத்தின் தற்போதைய ஆய்வாளர் தயாளன் ஆகியோர் உடனிருந்தனர் .

3

Leave A Reply

Your email address will not be published.