பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை:

0
1

பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை:

கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் நாட்டின் பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் பயணிகள் ரயில் இயக்கப்படாமல் உள்ளது. மேலும் சிறப்பு ரயில்களில் பெயரில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஆகியோருக்கு ஏற்கனவே இருந்த கட்டண சலுகை மறுக்கப்படுகிறது.

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்  பெரும்பாலானோர் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் மத்திய அரசும், ரயில்வே துறையும் பயணிகள் ரயிலில் மீண்டும் இயக்க வேண்டும், ரயில் கட்டண சலுக மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

2

இது குறித்த கோரிக்கை மனுவை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில்வே கோட்ட மேலாளரிடம் நேற்று (14/09/2021) அளித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.