திருச்சி அருகே தண்டவாளத்தில் போலீஸ் ஏட்டு சடலமாக மீட்பு:

திருச்சி அருகே தண்டவாளத்தில் போலீஸ் ஏட்டு சடலமாக மீட்பு:
புதுக்கோட்டை மாவட்டம் கலீப் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் ராமேஸ்வரம் செல்வதாக கூறி விடுப்பு எடுத்திருந்தார்.
நேற்று (14/09/2021) காலை வீட்டிலிருந்து சென்ற கண்ணன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை வெள்ளாற்று பாலம் அருகே தண்டவாளத்தில் கண்ணன் உடல் கிடந்த தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், காரைக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏட்டு கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஏட்டு கண்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
