கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது:

கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது:
2018-2019 ஆம் ஆண்டுகளுக்கு கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மாவட்டக் கலைமன்றத்தின் வாயிலாக திருச்சி மாவட்டத்தில் இயல்,
இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞர்களுக்கு வயது
மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட
ஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வாளர்குழு நடைபெற்றது.
கலைஇளமணி விருதிற்கு பரதநாட்டியக் கலைஞர்
அபிநயா, கலைவளர்மணி விருதிற்கு முகர்சங்கு கலைஞர் கி.சௌபாக்யலக்ஷ்மி, சுடர்மணி விருதிற்கு சிலம்பக் கலைஞர் தங்கராஜ், கலைநன்மணி
விருதிற்கு கிராமிய நடனக் கலைஞர் சகு.சத்யன், கலைமுதுமணி விருதிற்கு தவில் கலைஞர் விஜி.முருகன் என்பரும்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட
ஆட்சித்தலைவர் சு.சிவராசு விருதுகளை வழங்கினார்.
பின்னர், கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து விருதிற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு
மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர் உடனிருந்தார்.
