திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழகத்திலேயே மிக உயரமான 37 அடி ஆஞ்சநேயர் சிலை:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழகத்திலேயே மிக உயரமான 37 அடி ஆஞ்சநேயர் சிலை:
தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தற்போது அதைவிட உயரமாக 37 அடி ஆஞ்சநேயர் சிலை திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வாசுதேவன் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதி ஆஞ்சநேயர் சிலை அமைப்பதற்காக நாமக்கல் பகுதியில் உள்ள கல்குவாரியில் 105 டன் எடையுள்ள 40 அடி உயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் அதில் 37 அடி உயர சிலை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டு கலைநயத்துடன் ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் வடிவமைக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை லாரி மூலம் நேற்று (13/09/2021) வேலூரில் உள்ள கொள்ளிடக்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்திக்குள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
