திருச்சியில் கோவில் இடத்திற்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு:

திருச்சியில் கோவில் இடத்திற்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு:
திருச்சி எடமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து முறைகேடாக பட்டா மாற்றம் செய்து வைத்துள்ளதாக கூறி 200க்கும் மேற்பட்டோர் நேற்று (13/09/2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
எடமலைப்பட்டி புதூரில் சேர்ந்த ஜெகநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மேலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகே உள்ள இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து தனது மகள் பெயருக்கு தானசெட்டில்மெண்ட் செய்துள்ளனர்.
எனவே முறைகேடாக பெற்ற பட்டா மற்றும் மட்டும் தானசெட்டில்மென்டை ரத்து செய்ய வேண்டும், கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
