திருச்சி அருகே வாய்க்காலில் மாயமான சிறுவனை உடல் மீட்பு :

0
1

திருச்சி அருகே வாய்க்காலில் மாயமான சிறுவனை உடல் மீட்பு :

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் குடும்பத்துடன் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பழங்குடி பகுதியில் தங்கி திருச்சி என்.ஐ.டியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஹரிஷ் (15), அகிலன் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் நேற்று பழங்குடி பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்றபோது ஹரிஷ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினான்.

4
2

தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியும் ஹரிஷ்  கிடைக்கவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்தில் தாசில்தார்கள் முகாமிட்டு பொதுப்பணித்துறையினர், தீயணைப்புத்துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தொடர் மீட்பு பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

40 அடி ஆழமுள்ள குழுமியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் சிறுவனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து குழுமிக்கு வரும் கட்டளை வாய்க்கால் தண்ணீரை மண் மூட்டைகள் வைத்து தண்ணீரின் வரத்து குறைக்கப்பட்டது.

நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் அதிகாலை 2.40 மணி அளவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்