ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி தமிழக அளவில் திருச்சி 4-வது இடம்

0
1

ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி தமிழக அளவில் திருச்சி 4-வது இடம்:

தமிழகமெங்கும் கொரோனோ நோயை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் தமிழகமெங்கும் 12.09.2021 (நேற்று) மாபெரும் கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது .

இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் இன்று மாபெரும் கொரோனோ தடுப்பூசி முகாமானது சுகாதார துறையினருடன் இணைந்து வருவாய்த்துறை , உள்ளாட்சி துறை , ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு துறை பள்ளி கல்வி துறை , மகளிர் திட்ட துறை , காவல் துறை , செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் பிற துறையினரின் பங்களிப்போடு வெற்றிகரமாக நடைபெற்றது.

2

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு துவக்கி வைத்தார் . இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கி.ஆ.பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் . நேரு அவர்களும் பாப்பாக்குறிச்சி புனித பிலோமினால் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுமார் 497 முகாம்களும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 126 முகாம்களுமாக மொத்தம் 523 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன . மேலும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 11 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன . இன்று 1,10,332 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது . இதில் கோவிஷீல்டு முதல் தவணை 75918 நபர்களுக்கும் இரண்டாவது தவணை 24937 நபர்களுக்கும் மற்றும் கோவாக்ஸின் முதல் தவணை 6657 நபர்களுக்கும் இரண்டாவது தவணை 2820 நபர்களுக்கும் செலுத்தப்பட்டது .

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா நோயின் தொற்று பற்றிய விழிப்புணர்வும் , கொரோனா தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதார துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது .

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அதிகப்படியான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி தமிழகத்தில் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் நான்காம் இடத்திலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது இந்த சிறப்பான நிலையினை எட்டியதற்கு சுகாதார துறையினர் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து துறை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் .

3

Leave A Reply

Your email address will not be published.