உயிர்ப்போடு வாழும் மாமனிதர்

0
1

உயிர்ப்போடு வாழும் மாமனிதர்

வடிவமைப்பு சுய ஆக்கங்களுக்காக வெளியாகும் ஓவியங்கள் ஆக்கங்களின் தரம் எழுத்தாளர்களுக்குப் பாரபட்சமில்லாது களம் அமைத்துக் கொடுத்தல் ஆகிய தன்மைகளால் சிற்றிதழ்கள் இலக்கியப் பரப்பில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளன. அத்தகைய இதழ்களை ஆவணப்படுத்துதல் என்ற  பணி சவாலானது. அந்தப் பணியில் தம்மைக் கரைத்துக் கொண்டவர்  பொறியாளர்  க.பட்டாபிராமன்.

பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது இல்லம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. அதை இல்லம் எனபதைவிட இதழ்களின் நூலகம் என்பதே பொருத்தமாகும். தொடர்ந்து வெளிவரும் இதழ்கள், நின்று போன இதழ்கள், அயலக இதழ்கள், தினசரிகளின் தலையங்கம், கையெழுத்துப் பிரதிகள், அஞ்சல் அட்டை இதழ்கள் என அத்தனையும்  இவர் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. தம் ஓய்வு ஊதிய நிதியிலிருந்து, ஆண்டுக்கு ஒன்னறை இலட்ச ரூபாயை இப்பணிக்காக செலவு செய்து  தம் வாழ்நாளை அர்ப்பணித்த இவர், அண்மையில் மாரடைப்பால் காலமானார்.  மாபெரும் செயல்பாட்டாளரின் பொன்னுடல் மறைந்திருக்கலாம். பன்னாட்டுத் தமிழ் இதழ்கள் நூலகத்தின் ஒவ்வொரு பணியிலும் உயிர்ப்போடு நிறைந்து தமிழ் கூறு நல்லுலகிற்கு பங்களித்துக் கொண்டே இருப்பார் அரிமா க.பட்டாபிராமன்.

2

& மா.ராஜா

3

Leave A Reply

Your email address will not be published.