திருச்சி அருகே வாய்க்காலில் மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரம்:

திருச்சி அருகே வாய்க்காலில் மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரம்:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் குடும்பத்துடன் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பழங்குடி பகுதியில் தங்கி திருச்சி என்.ஐ.டியில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஹரிஷ் (15), அகிலன் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் நேற்று பழங்குடி பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்றபோது ஹரிஷ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினான்.

தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியும் ஹரிஷ் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்து வந்த துவாக்குடி மற்றும் ஆத்தூர் போலீசார் இணைந்து அறிவைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
