தமிழ் வாழ்வில் நிலைத்த புகழுக்குரியவர்

0
1

தமிழ் வாழ்வில் நிலைத்த புகழுக்குரியவர்

அண்மையில் இயற்கையோடு கலந்துவிட்டார் நாடறிந்த பேச்சாளர் சமயத்தமிழால் தமிழ் வளர்த்த நாவுக்கரசர் பேராசிரியர் முனைவர் சோ.சத்தியசீலன். மலைக்கோட்டையின் வரலாறு கூறும் ‘செவ் வந்தி புராணம்’ என்னும் நூலின் உரையாசிரியர். பட்டதாரி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், திருச்சி தேசியக் கல்லூரி பேராசிரியர், உருமு தனலட்சுமி கல்லூரிப் பேராசிரியர் என உயர்ந்து அக்கல்லூரியின் முதல்வராகத் திறம்படப் பணியாற்றி எணண்ற்ற மாணவர்களை உருவாக்கியவர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். கலைமாமணி விருது, செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை செட்டியார் விருது, சொல்லின் செல்வர் விருது, தில்லி தமிழ்ச் சங்கம் மற்றும் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் விருதுகளை பெற்றவர். 27 நூல்களால் தமிழன்னையை அணி செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து தமிழியக்கம் நூல் அகற்றப்பட வேண்டுமென சிலர் கூக்குரலிட்டபோது தமிழியக்கத்தைப் பாட நூலாக்கி ”விரும்பிய நூலைப்படி” என உறுதிகாட்டிய பேரறிஞர்.

2

இளமையில் அறிஞர் அண்ணாவோடு நாடகத்தில் நடித்த பெருமைக்குரியவர். முத்தமிழறிஞர் கலைஞருக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தவர். ஆறு கண்டங்களில் நூறு நாடுகளில் வாழும் பன்னிருகோடித் தமிழர்களின் இதயத்தில் தெய்வத் தமிழின் வீச்சை தம் விரலின் வழியும், குரலின் வழியும் கொண்டு சென்ற இந்தத் தமிழ்ப் பேரறிஞர், தமிழர் வாழ்வில் நிலைத்த புகழுடன் பேசப்படுவார் என்பதை நம்மால் உரத்துச் சொல்ல முடியும்.

– ரெ.நல்லமுத்து

3

Leave A Reply

Your email address will not be published.