மாணவர்களுக்காக கையேந்தும் ஆசிரியர்!

0
1

மாணவர்களுக்காக கையேந்தும் ஆசிரியர்!

”எம் பள்ளியின் மேல்நிலைக் குழந்தைகள் சிலருக்கு செல்போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இயன்றவர்கள் பழைய செல்போன் இருந் தால் அனுப்புங்கள். கையேந்துகிறேன்” இப்படி விரிகிறது  ஒர் ஆசிரியரின் முகநூல் பக்கம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு முகநூலில் இப்படி பதிவு செய்கிறார். “ஒரு தோழர் ரூ.12,000 அனுப்பி ஒரு குழந்தைக்கு செல் வாங்கித் தரு மாறு கூறினார். பெயர் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளார். ரூ.9,700 வாங்கி உள்ளோம். இது 11-ம் வகுப்பு துர்காவிற்கு. மிச்சம் ரூ.2,300 இருக்கிறது… யாரேனும் அனுப்பினால் சேர்த்து வாங்கித் தந்துவிடலாம். கையேந்துகிறேன்”

2

துர்கா யார் என நமக்குள் வினா எழக்கூடும்? அதற்கும் அவரே பதில் சொல்கிறார்… “இனி படிக்க வைக்க இயலாது என்று கூலி வேலைக்குப் போகும் அவளது தாயாரால் தீர்மானிக்கப்பட்டு, வேலைக்கு சென்று கொண்டிருந்த தேவதை. விவரம் அறிந்து திருச்சிராப்பள்ளி, சமயபுரம் மொடக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அழைத்து வந்தார்.

“என்ன க்ரூப் வேண்டும்?”

“வொகேஷனல் தான் கிடைக்கும்னு சொன்னாங்க!”

“ஃபர்ஸ்ட் க்ரூப் தரேன். படிக்கிறியா?”

“முடியுமா… தெரியல?!”

“முடியுமா பாரு… முடியலன்னா மாத்திக்கலாம்“

“சரிங்க சார்!”

இப்படியாக எனது மகள்களின் எண்ணிக்கையில் இன்னும் ஒரு எண்ணைக் கூட்டினாள் துர்கா. செல் வாங்குவதற்காக வந்த தொகையில் முதல் செல் அவளுக்கு. “சிம் போட்டு தரேன் யார்ட்டயாச்சும் பேசு…” என்றேன்.

“போன் பேசனதே இல்ல… அவ வீடு போயி சாமி கும்பிட்டுட்டு பேச சொல்றேன்” என்கிறார் அவளது பாட்டி.

ரயிலேறாத குழந்தையைப் பார்த்திருப்போம். இந்த டிஜிட்டல் உலகத்தில் போனே பேசியிருக்காத குழந்தைகள் உண்டு. பழைய செல் இருப்பவர்கள் கொடுத்து உதவுங்கள். “இப்போதும் கையேந்துகிறேன்”

தம் பிள்ளைகளுக்காக களமிறங்கி இருக்கிறார் மாற்றுக்கல்விச் சிந்தனையாளர். குழந்தைகள் நடுவ ஆசிரியர் எழுத்தாளர் இரா.எட்வின். கொடுத்து உதவ விரும்புவோர் தொடர்புக்கு 98424 59759…!

& ஜா.சலேத்

3

Leave A Reply

Your email address will not be published.