“கவிக்கோ ஸ்ட்ரீட்!” (ஆஸ்திரேலியா வழங்கிய கௌரவம்)

0
1

“கவிக்கோ ஸ்ட்ரீட்!” (ஆஸ்திரேலியா வழங்கிய கௌரவம்)

ஆலாபனை, பித்தன், பால் வீதி உள்ளிட்ட எண்ணற்ற கவிதை நூல்களை எழுதியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். மெல்போர்ன் நகரின் மெல்ட்டன் எனும் பகுதியில் அமைந்துள்ள தெரு ஒன்றுக்கு ‘கவிக்கோ ஸ்ட்ரீட்’ என பெயர் சூட்டி அவரை கௌரவித்திருக்கிறது ஆஸ்திரேலியா அரசு.

சாகித்ய விருது, கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற கவிக்கோவின் பெயரை, அந்தத் தெருவுக்குச் சூட்டுவதற்கு காரணமாக இருந்தவர் எம்.ஏ.முஸ்தபா. அவர் வாழும் பகுதியில் உள்ள தெருவுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட விரும்பி, அதற்கான விவரங்களை அளித்து, அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.

2

அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி அவர் விரும்பிய பெயரை வைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. “திரை உலக சார்பற்ற சிறப்பான கவிஞர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டில் உள்ள மக்களும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தேன்.

ஆஸ்திரேலியாவில் தெருவுக்கு ஒரு தமிழ்ப் பெயர் சூட்டப்படுவது இதுவே முதல்முறை. மேலும் அதிகமான கவிஞர்களின் பெயர்களை இவ்வாறு வெளிநாடுகளில் ஒலிக்கச் செய்ய முயற்சி செய்யவிருக்கிறேன்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் எம்.ஏ.முஸ்தபா.

– அ. காதர்பாட்சா

3

Leave A Reply

Your email address will not be published.