அன்புப்பணி மையத்தின் அருங்கொடைப்பணி…!

0
1

அன்புப்பணி மையத்தின் அருங்கொடைப்பணி…!

தெரு விளக்கு இருளைக் கூட்டிப் பெருக்கி அருள் கூட்டிடும் புகழ் விளக்கு. சுடர் சூரியன் விட்டுச் சென்ற வேலையை செய்வதில் இதற்கு பழக்கம் அதிகம். தூய தொண்டிற்கு இது தான் பொருள் விளக்கம். “ஊரின் இருள் போக்கிடும் இருளைப் பகலாக்கிடும்.” என்பார் பரதகவி என்னும் புதுக்கவிஞர்.

கலைக்கூத்து கிராமம். புதுக்கோட் டை மாவட்டம், விராலிமலையில் உள்ள கண்விழிக்காத குக்கிராமம். காடுகள் சூழ்ந்துள்ள அந்தப் பகுதியில் வாழும் மக்கள் தெருவிளக்கு இல்லாமல் வாழ்ந்தே பழகிவிட்டனர். எத்தனை ஆண்டு காலம் அந்த மக்களின் வாழ்க்கை இப்படியே இருப்பது என உணர்ந்த அருட்கொடை இல்ல அன்புப்பணி மையம் அந்தப் பகுதிக்கு சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்க முடிவு செய்தது.

2

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இப்பணிகள் தொடங்கப்பட்டாலும், முழு மூச்சோடு இயங்கி பணிகளை முழுமையாக முடித்து சூரிய சக்தியில் இயங்கும் தெரு மின்விளக்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இதனை இவ்வமைப்பின் திருச்சி இயக்குனர் ஆல்பர்ட் தலைமை ஏற்று கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று திறந்து வைத்தார்.
& இப்ராகிம்

3

Leave A Reply

Your email address will not be published.