திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த தங்கும் விடுதி:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த தங்கும் விடுதி:

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் புறநோயாளிகள் என தினமும் பல்வேறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நோயாளி உடன் இருக்கும் உறவினர்கள் தங்குவதற்கு போதிய வசதி இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள தங்கும் விடுதிகளில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க அனுமதி மறுக்கப்பட்டது.

2

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வந்தது. இது நோயாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் முன்பு இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்ட விடுதியில் தற்போது ஒரு நாள் இரவு தங்க ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படவதாக கூறுகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.