திருச்சியில் விதிகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்:

0
1

திருச்சியில் விதிகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்:

திருச்சி துறையூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு உத்தரவின் பேரில், துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ராமநாதன் நேற்று (12/09/2021) ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் துறையூர் பகுதியில் உள்ள 2 இறைச்சிக் கடைகளில் அழுகிய ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 14 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.