வீடியோ கால் மூலம் விபரீதம்: எச்சரிக்கும் திருச்சி மாநகர காவல்துறை:

0
1

வீடியோ கால் மூலம் விபரீதம்: எச்சரிக்கும் திருச்சி மாநகர காவல்துறை:

வீடியோ கால் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2

வீடியோ கால் மூலம் பணம் பறிக்கும் கும்பல் பேஸ்புக் மூலம் தொலைபேசி எண்ணை எடுத்து அதன் மூலம் வீடியோ கால் செய்து ஸ்கிரீன் ஷாட் மூலம் உங்களுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

நவீன தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நேரத்தில் இது போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுய விபரங்களை பதிவிட வேண்டாம் . மேலும் சமூக வலைதளங்களை கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் இணையதளத்தில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டிஸ் பதிவிடப்பட்டுள்ளது. அதில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in/ என்ற வலைத்தள பக்கத்தை அறிவித்துள்ளது. மேலும் சைபர் க்ரைம் உதவி எண் 155260 எண்ணிலும் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.