திருச்சி அருகே என்ஜினீயர் வீட்டில் நகை பணம் கொள்ளை: 

0

திருச்சி அருகே என்ஜினீயர் வீட்டில் நகை பணம் கொள்ளை: 

திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (51). இவர் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி தனது உறவினரின் திருமணத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள்  3 பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

சதீஷ் நேற்று முன்தினம் இரவு (10/09/2021) வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து  அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.