திருச்சி அருகே கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கி: 

0
1

திருச்சி அருகே கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கி: 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆளிம்பட்டி பகுதியில்  மாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று (11/09/2021) காலை கோவில் நிர்வாகிகள் வழக்கம்போல் வந்துள்ளன.  அப்போது கோவில் வாசலில் குழந்தைகள் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

2

இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கோவில் வாசலில் கிடந்ததாக தெரிவித்தனர். உடனடியாக கோவில் நிர்வாகிகள் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

4

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கி மற்றும் சிறிய அளவிலான பால்ரஸ் (500 இரும்பு குண்டுகள்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது நாட்டுத்துப்பாக்கி என்பதும் பறவைகளை வேட்டையாட பயன்படுத்தும் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து துப்பாக்கியை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்