அதிநவீன அறுவை சிகிச்சையில் அசத்திய துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை:

0
1

அதிநவீன அறுவை சிகிச்சையில் அசத்திய துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர் பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இவருடைய வலது கையின் உள்ளங்கை எலும்புகள் உடைந்து விரல் தசை நாண்கள் அறுந்து விட்டது.

இந்நிலையில் விஜய் சிகிச்சைக்காக நேற்று (11/09/2021) துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜான் விஸ்வநாத் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.

2

இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் வலது கையில் உடைந்து இருந்த இரண்டு உள்ளங்கை எலும்புகளை அதிநவீன சிகிச்சை மூலம் இணைத்ததுடன் கையில் அறுந்துபோன தசை நாண்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இணைத்து வரலாற்றிலேயே முதன்முறையாக சாதனை படைத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.