கபடி பயிற்சியின் போது திருச்சி சிறை வார்டர் திடீர் மரணம்:

0
1

கபடி பயிற்சியின் போது திருச்சி சிறை வார்டர் திடீர் மரணம்:

திருச்சி மத்திய சிறையை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன் (40). இவர் மதுரையை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுபட்டியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இவர் மதுரையில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். வழக்கம்போல் நேற்று சிறை வளாகத்தில் கபடி பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

2

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சரவணன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.