திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்கவிழா 

0

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின்
11ம் ஆண்டு துவக்கவிழா 

திருச்சி அண்ணாசிலை சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்கவிழா இன்று (11/09/2021) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இம்மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 11.9.2021 முதல் 15.9.2021 வரை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் சிறப்பு அம்சமாக 25 நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இம்மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவில் ஐசியு தீவிர சிகிச்சை பிரிவு, சாலை விபத்து பிரிவிற்கு சிறப்பு மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் (பொது சிறுநீரகம், மகளிர்) அதிநவீன ரத்த சுத்திகரிப்பு(டயாலிஸ்) அனைத்து மருத்துவதுறைகளின் அறுவை சிகிக்சை பிரிவுகள் செயல்படுகின்றன.

மேலும் இம்மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைகளாக வயிற்று அறுவை சிகிச்சை, குடல் அடைப்பு, குடல் இறக்கம், பைல்ஸ், விரைவீக்கம், சீல் கட்டிகள், தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைகள் (பித்தப்பை கல், அப்பன்டீக்ஸ், குடல் இறக்கம், கர்ப்பப்பை கட்டிகள்) அனைத்துவிதமான மஞ்சள் காமாலை கணையம் மற்றும் கல்லீரல் நோய் மருத்துவம். பக்கவாதம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதயம் – நுரையீரல் மருத்துவ சிகிச்சைகள் சர்க்கரை நோய் ஆலோசனைகள், சர்க்கரை நோயால் ஏற்படும் புண்கள், சிறுநீரக கல், சிறுநீரக மற்றும் மூத்திரப்பை, புற்றுநோய் சிகிச்சை, மகப்பேறு ஆலோசனை. மாத விடாய் பிரச்சனை. குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம், எலும்பு முறிவு மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மூளை கட்டிகள், தட்டுவட கட்டிகள், கழுத்து, முதுகு எலும்பு முறிவு, தீக்காய சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் டாக்டர் S. ராதாகிருஷ்ணன் டாக்டர் N. கார்த்திகேயன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்