திருச்சி காவிரி ஆற்றில் காயங்களுடன் ஆண் சடலம்:  உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:

0
1

திருச்சி காவிரி ஆற்றில் காயங்களுடன் ஆண் சடலம்:  உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:

திருச்சி ஓயாமரி சுடுகாடு எதிர்ப்புறம் உள்ள காவிரி ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  கிடப்பதாக நேற்று (10/09/2021) போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்?  உடலில் காயங்கள்  இருப்பதால் இது கொலையா?  என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று (10/09/2021) மதியம் முதல் காவிரி ஆற்றின் பாலத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.  இறந்தவர் காரில் வந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.