பால் கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடலில் ஈடுபட்ட தலைவர் செயலாளர் நீக்கம்:

0
1

பால் கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடலில் ஈடுபட்ட தலைவர் செயலாளர் நீக்கம்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை கடந்த மாதம் நடைபெற்றது.

2

இதில் நிதி மோசடி செய்து சங்கத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் பணத்தை தலைவர் மற்றும் செயலாளர் கையாடல் செய்தது தெரிய வந்தது.

4

இதனையடுத்து, தணிக்கை அதிகாரிகளின் அறிக்கையின் பேரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரை  எந்த ஒரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்கத்திலும் பதவி வகிக்க நிரந்தரமாக தகுதியிழப்பு செய்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் சட்டப் பிரிவு 34ன் கீழ் நேற்று  முன்தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் உடந்தையாக செயல்பட்ட செயலாளர் முருகேசன் தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து திருச்சி மாவட்ட பால்வள துணை பதிவாளர் ஜெயபாலன் உத்தரவிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்